Friday, July 20, 2012

மழைப்பொழுது

மழைக்குப் பின்னர்
என் அறையெங்கும்
இரைந்து கிடக்கிறது
உன் சுவாசம்
****************************************************************
பூமி நோக்கிய பயணத்தில்...
சற்றே இளைப்பாறுகிறது
இலைமேல் விழுந்த மழைத்துளி
****************************************************************
தேங்கிய நீரை
கடலாக்கி கொண்டிருந்தது
ஓடம்போல மிதக்கும்
இலையொன்று...
****************************************************************
தூவானம் தூறிச் சென்ற
மழைத்துளிகள் யாவும்...
பிரதிபலிக்கிறது
கொஞ்சம் வானத்தை
****************************************************************
அடைமழையில்
தனித்து குளியல்
என்போன்றே பாவப்பட்ட மரம்
****************************************************************
தரையில் விழுந்து மரணித்த துளிகளுக்காய்
மௌன அஞ்சலி செய்கிறது..
உன்மேல் விழுந்து
புனிதம் பெற்ற மழைத்துளிகள்
****************************************************************

1 comment:

  1. காரில் செல்கையில் சாரல்
    ஈரமண் நுகர்கையில்
    காற்றுப் போனது காரில்
    உயிர்த்தது என் குழந்தைமை
    சாரலில் கரைந்தது என் வயது...
    காருக்குள் எந்திரக் கணவன் எரிச்சலால்
    பாதியில் பறிக்கப்பட்டது என் சிறகுகள்...

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...