Friday, July 20, 2012

காதல்மொழி

முத்தம் கொண்டே முடிப்பது
என முடிவு
உனக்கும் எனக்குமான
ஊடல் விளையாட்டை
****************************************************************
கண்டதும் காதல் சாத்தியமே
என்பதை
உனைக்காணும் வரை
நம்பவில்லை நான்
****************************************************************
ரணப்படுத்திய தனிமையை
குத்தி கிழித்தேன் உன் நினைவுகளால்...
கைகள் எங்கும்
கடந்த காலத்தின்
காதல் குருதி கசிந்திருந்தது
****************************************************************
 நீ முத்த வங்கி... நான் ஒரு முத்த வாங்கி...
****************************************************************
அவள் குறள் வாசித்தாள்... அவளின் குரல் இனித்தது 
****************************************************************
விலகிச்சென்று விட்டாய்...
கதறி அழுகிறது
கனவில் நாம் பெயர் சூட்டி
வளர்த்த குழந்தை
****************************************************************
ஒற்றை முத்தத்தில்
வீழ்ந்து போகிறது
வலிமையற்ற நம் ஊடல்
****************************************************************
என் அறை முழுவதும்
படர்ந்து கிடக்கிறது
உனை நினைத்து சிந்திய
கண்ணீரின் ரேகைகள்
****************************************************************

4 comments:

  1. நல்ல வரிகள்...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமை உங்கள் கவிதை வரிகள். பெருமை வாசித்த எனக்கு. போக்க வேண்டும் வறுமையை இன்னும் பல மறுமை கவிதைகளை வாரி வழங்கி.

    ReplyDelete
  3. காதலின் வலியை
    பிரிவில் உணர்ந்தாலும்
    பெண்ணென்பதால் அடக்கும்
    பொழுதுகளில் என்னையே நான்
    கொல்கிறேன் - பலமுறை...!

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...