முன் குறிப்பு :
இப்பதிவில் ஹைக்கூ என்னும் பெருங்கடலிலிருந்து கையளவு நீரை அள்ளி உங்களுக்கு காண்பிக்கிறேன். இது கடலென்றால் ஆம். கையளவு நீரென்றாலும் ஆம்தான். என்னைப்போல் ஒரு பாமரனுக்கும் புரியும்வகையில் பல புத்தகங்களில் இருந்தும் குறிப்பெடுத்து சொல்ல முயற்சித்துள்ளேன். அட வாங்க பாஸ்... நாமும் ஹைக்கூ எழுதலாம்.
அறிமுகம் :
ஜப்பானில் தோன்றிய "ஹைக்கூ" இல்லாத உலக இலக்கிய மொழியே இல்லை இன்று. ரெங்கா என்ற நீள்வடிவ கவிதையின் ஆரம்பத்தில் எழுதிய குறுங்கவிதையே ஹைக்கூ. "Matsuo Bashō" என்பவரால் 17 ஆம் நூற்றாண்டில் ஹைக்கூ பிரபலப்படுத்தப்பட்டது. ஹைக்கூவின் முன்னோடி இவர். 19 ஆம் நூற்றாண்டு வரை "ஹொக்கூ" என்றழைக்கப்பட்ட இதனை ஹைக்கூ என அழைக்க ஆரம்பித்தவர் "மாஸஒகா ஷிகி".
முதலில் நாம் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். ஹைக்கூவிற்கு என்று உள்ள சில இலக்கணங்கள் ஜப்பானிய ஹைக்கூ அறிஞர்களால் கடைபிடிக்கப்பட்டது. சிலவற்றைத்தவிர மற்ற இலக்கணங்கள் யாவும் அதன்பின் எழுதுவதற்கு வசதியாக தளர்த்தப்பட்டது.
"பாஷோ", தான் எழுதிய கவிதைகளை ஹொக்கூ என அழைத்தார். அதன் அர்த்தம் ஆரம்பச்செய்யுள். ரெங்கா கவிதையின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட செய்யுள் என்பதால் இவ்வாறு அழைத்தார்.
பொதுவாக ஜப்பானியர்கள் ஹைக்கூவை மேலிருந்து கீழாக ஒரே லைனில் அச்சிடுவார்கள். ஆங்கிலத்தில் பிற மொழிகளிலும் மூன்று வரிகளை அடுக்கடுக்காக அச்சிடும் பழக்கம் உள்ளது.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகள் என பாஷோ , யோஷோ பூஸான், கொபயாஷி இன்ஸா மற்றும் ஷிகி இந்நால்வரை குறிப்பிடலாம்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... பல வார்த்தைகள் கொண்டு விளக்க வேண்டிய ஒரு காட்சியை அல்லது உணர்ச்சியை மூன்றே வரிகளில் அடக்குவதென்பது எத்தனை கஷ்டம். ஹைக்கூ இதை செய்து காட்டுகிறது. ஹைக்கூவின் வெற்றியே அதில்தான் உள்ளது.
உதாரணத்திற்கு ஒரு ஹைக்கூ :
அழகான பட்டம்
வானேறிவிட்டது
பிச்சைக்காரன் குடிசைமேல்
ஹைக்கூவின் விதிகள் :
1 . நேரடியாக உணர்ந்த அனுபவம். அதாவது ஒரு ஹைக்கூ கவிதை படிக்கும்போதே அந்த சம்பவம் நம் கண்முன்னே நிகழ்வதுபோல இருத்தல் வேண்டும்.
2 . எவ்வித வார்த்தை ஜாலங்களும் இருக்க கூடாது. முக்கியமாக நம் உவமைகளோ வர்ணனைகளோ கண்டிப்பாக இருத்தல் கூடாது.
3 . மூன்றாவது வரியில் ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருப்பது போல் வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஹைக்கூ.
தோட்டத்தை விற்றதும்
பறவைகள் கானம்
வேறாக ஒலிக்கிறது
இந்த ஹைக்கூவில் நாம் உணர்வது தோட்டத்தை விற்ற உரிமையாளன் ஒருகணம் தன தோட்டத்தை திரும்பி பார்க்கிறான். அதுவரை இனிமையாக ஒலித்த பறவைகள் கானம், தோட்டத்தை விற்றபின் அவன் மனத்தில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவது வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பதை நாம் காணமுடியும் இக்கவிதையில்.
4 . 5-7-5 என்றவாறு அசைகள் (Syllable) கொண்ட மூன்று வரிகள் இருக்க வேண்டும். ஆக... மொத்தம் 17 அசைகள் இருக்கவேண்டும் என்பது விதி. நான்கு வரிகளில் ஹைக்கூ எழுதுவது தவறில்லை. முடிந்த அளவில் மூன்று வரிகளில் எழுதுவது நல்லது.
5 . பருவ காலங்களில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இதை ஜப்பானிய மொழியில் Kigo (கிகோ) என்றழைப்பார்கள். அதாவது காலை, மாலை, மழை, வெயில், வசந்தகாலம் இப்படியாக... சில மறைமுக குறிப்பால் கூட காலத்தை உணரச்செய்யலாம். உதாரணம் : கானல்நீர் - கோடைகாலம்; வெள்ளம் - மழைக்காலம்; சருகுகள் - இலையுதிர்க்காலம்; (இந்த விதியை தளர்த்திக் கொள்ளலாம். நவீன ஹைக்கூ அறிஞர்கள் காலத்தை குறிப்பதை விட்டுவிட்டார்கள்)
ப்ரீயா விடுங்க. இந்த விதிகளில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பெரும்பாலான விதிகளை நவீன ஜப்பானிய ஹைக்கூ அறிஞர்களே கைவிட்டு நாளாகிறது. ஆனால் முதல் மூன்று விதிகள் இருக்கும்படியாக எழுதுவது நல்லது.
முக்கியமா ஒரு விசயம்... புரட்சிக்கருத்தோ நம் உருவகமோ ஹைக்கூவில் இருக்கவே கூடாது. கீழே வரும் மிகப்பிரபலமான குறுங்கவிதையை கவனியுங்கள்
எத்தனைபேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்
ஆரம்ப காலத்தில் இக்கவிதையை ஹைக்கூ என நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த கவிதை நிச்சயமாக ஹைக்கூ கிடையாது. இந்த கவிதையில் கடைசி வரியான "சேரிக்குள் தேர்" என்பதில் புரட்சிக்கருத்து ஒளிந்திருப்பதை காணலாம். புரட்சிகர கருத்து கலந்திருப்பதால் இது ஹைக்கூ என்ற அந்தஸ்தை இழக்கிறது.
"சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்! கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்" என்று "ராபர்ட் ப்ளை" கூறியதுபோல ஹைக்கூ என்பது வாசிப்பவனை எழுதியவன் உணர்ந்த அதே விசயத்தை கண்முன்னே நிகழ்த்தி உணர செய்கிறது.
அடுத்த பாகத்தில் பிரபல ஹைக்கூ கவிஞர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை காணலாம்.

நல்ல தொகுப்பு. நல்ல ஆராய்ச்சி. வாழ்த்துகள் :-)
ReplyDeleteamas32
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் :) ஹைக்கூ பற்றி சிறப்பானதொரு ஆக்கம் .
ReplyDeleteஅடுத்த பகுதியில் மேலும் பல ஹைக்கூ உதாரணங்கள் வருமென எதிர்பார்க்கிறேன் . தொடருங்கள் :)
nice man...கவிஜ குருவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் வாத்தியாருக்கு அன்புகள் பல :)
ReplyDeletearumayana pativu...vazhtukal
ReplyDeleteகவுத!
ReplyDeleteநல்ல முயற்சி கார்த்திக்.
ReplyDeleteட்விட்டரின் வடிவத்திற்கும் ஹைக்கூ-வின் வடிவத்திற்கும் ஒற்றுமை இருப்பது மறுக்க முடியாதது. ட்விட் வசப்பட்டவருக்கு, ஹைக்கூ எழுதுவது மிக சுலபம் தான்.
நல்ல முயற்சி சகா! ஹைக்கூ எளிது என்றே நினைத்திருந்தேன்! அதற்கும் இலக்கணம் உண்டென்பது நான் அறிந்திராதது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசூப்பரா கருப்பு... நல்ல உபயோகமான பதிவு. வாழ்த்துகள் மச்சி - ராக்கெட்
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி - ஹைக்கூ எழுதுவது எப்படி? - சுஜாதா
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteஅடுத்த பாகத்தை
ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்.
நல்ல பதிவு! :) ரொம்ப யூஸ்ஃபுல் மாம்ஸ்!
ReplyDeleteநல்ல பதிவுங்க.. இன்னொன்னு இதே மாதிரி 2006லே வந்திச்சுன்னு நினைக்கிறேன். அது உங்களுக்கு உதவலாம்னு நினைக்கிறேன்
ReplyDeleteசூப்பர் கருப்பு... :)
ReplyDeleteஇன்று போகிற போக்கில் பலர்-நான் உட்பட-ஹைகூ என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதுகிறார்கள். அதை முறையாக பயின்று செய்தால் ஹைக்கூ தப்பிக்கும்.ஹைக்கூவிற்கும் நவீன தமிழ் கவிதைகளுக்கும் நடுவே ஊசலாடும் மெல்லிய நூற்கற்றையை ஆராய்ந்து எழுதினால் இக்கட்டுரையின் நோக்கம் மேலும் விரிவடையும்
ReplyDeleteஎன்னன்னவோ சொல்றபா..ஆனா ஷோக்கா கீது..ஆமா, ‘தோட்டத்தை விற்றவன்’ ஹைக்கூவா..டவுட்டா இருக்கு..
ReplyDeleteகலக்குற மாப்பி. வார்த்தைகளே இல்ல உன்னை பாராட்ட :-))
ReplyDeleteகருப்புவின் பொறுப்பான முயற்சிகளுக்கு இதைவிட சான்று வேண்டுமா என்ன..?
ReplyDeleteநல்ல முயற்சி கருப்பு... காலையிலேயே படித்துவிட்டேன்.... தொடரவும்.....
ReplyDeleteமாப்பி மன்னிச்சு..
ReplyDeleteஎனக்கு உன்ன அளவுக்கு தெரியாது. ஆனாலும் எனக்கு தெரிஞ்ச சொற்ப ஹைக்கூ விதிகளின் படி இது
"தோட்டத்தை விற்றதும்
பறவைகள் கானம்
வேறாக ஒலிக்கிறது"
ஹைக்கூ அல்ல.. - சுஜாதா..
அருமை மாப்பி, வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநல்ல பகிர்வு... தொடருங்கள்... நன்றி...
ReplyDeleteபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
அருமையான படைப்பு
ReplyDeleteகண்கள் பார்ப்பதை
ReplyDeleteமனது எழுதுவதே
ஹைக்கூ
கண்டேன் கண்டேன்.
ReplyDelete