Monday, December 10, 2012

புத்தகக் கண்காட்சி வந்தாச்சு!!!


புத்தக விரும்பிகளின் தீபாவளியாகக் கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி இதோ இந்தா வந்தாச்சு. சின்ன வயசுல தீபாவளிக்கு சரியா ஒருமாசம் இருக்குறப்பவே அதற்கான எதிர்பார்ப்பும் சந்தோசமும் மனசுல தொடங்கிரும். அதுமாதிரிதான் இந்த புத்தகக் கண்காட்சி எனக்கு.



இந்த வருடம் 36-வது கண்காட்சி ஜனவரி 11 முதல் 23 வரை நடக்கப்போகுதாம். மேலதிக தகவல்களுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமான (BAPASI) இணையதளத்தில் பார்வையிடவும்.

என்னமாதிரி ஞாபகமறதிக்காரர்களுக்கும் புதியவர்களுக்கும் சிலவற்றை ஞாபகப்படுத்ததான் இந்தப்பதிவு.

1. பொதுவாக அவ்வருடத்திய "ஹிட்" புத்தகத்தையும், பொன்னியின் செல்வன் போன்ற எளிதாக கிடைக்கும் புத்தகங்களையும் கடைசியாக வாங்கவும். இந்த கண்காட்சில வாங்கத்தவறிட்டாலும் எளிதாக வெளியே கிடைக்கும். முன்னப்பின்ன பலத்த சிபாரிசில்லாத புத்தகத்த வாங்குறதுங்கறது முதல்நாள் முதல்ஷோ டிக்கெட் புக் பண்ணி ஒரு படத்த பார்க்குறமாதிரி... மொக்கைன்னா நாம காலி. பீ கேர்ஃபுல்.

2. சனி & ஞாயிறுல போகலாம், வாரநாட்கள்ல வேண்டாம்ன்னு நினைச்சீங்கன்னா ரொம்ப தப்பு. எல்லாரும் இதே எண்ணத்துலதான் அந்த ரெண்டுநாட்கள்ல வந்து, அடுத்து வர்றதுக்கே யோசிக்கிற அளவுக்கு 'டரியல்' ஆகிடறாங்க. அவ்வளவு கூட்டம்.

3. சென்ற வருடம் என்னால முதல்நாள் போகமுடியல. ஆனா போன நண்பர்களுக்கு பெரும் ஏமாற்றம். அன்றுதான் புத்தகம் அடுக்கும் வேலையே தொடங்கிருந்தாங்க பெரும்பான்மையான பதிப்பகங்கள். So அன்றைய நாளை வேடிக்கைக்கு பயன்படுத்திக்கலாம். :-)

4. ஒருமுறை போனால் போதும்ன்னு ஏதாவது எண்ணம் இருந்தா மாத்திக்கோங்க ப்ளீஸ். முடிஞ்ச அளவுக்கு ஒருநாள் முழுக்க "விண்டோ-ஷாப்பிங்" பண்ணி எந்தெந்த பதிப்பகங்கள் இருக்கு என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம்ன்னு ஒரு பட்டியல் தயார் பண்ணுங்க. ஒரு முறைக்குமேல் செல்லமுடியாதவர்கள் எனில் பிரச்சினையில்லை. முன்கூட்டியே திட்டமிடலோடு சென்று வரலாம். போன வருடம் (கிட்டத்தட்ட எல்லா வருடங்களும்) தாறுமாறா விற்பனையான பொன்னியின் செல்வன் ஆயிரம் ரூபாய்க்கு மேல சில பதிப்பகங்கள்ல விற்பனையான அதே நேரத்தில் மலிவுவிலை பதிப்பு ரூபாய் 200-க்கு கிடைச்சது. காஸ்ட்லி பதிப்பகங்களான உயிர்மை & காலச்சுவடு செல்லும் முன் விசா, மீனாட்சி பதிப்பகங்களை ஒரு முறை பார்வையிடுதல் உங்கள் பட்ஜெட்டுக்கு உதவலாம். தேடுங்க பாஸ். சிக்கனப்படுத்தலாம்.

5. மாலை 6 மணியளவில் தினம் ஓர் எழுத்தாளர் என வாசகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சென்ற வருடத்திலிருந்து தொடங்கியுள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க. ரொம்பவே இணக்கமான சந்திப்பா இது இருக்குது. சென்றமுறை இந்நிகழ்ச்சியை திறம்படத்தொகுத்து உதவி செய்த ஞானி அவர்களுக்கு இந்நேரம் நன்றிகள். வெளியரங்கில் தினமும் மாலை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்குவாங்க. முடிஞ்சவரை உங்களுக்கு பிடிச்ச பிரபலம் கலந்துக்குற அன்னைக்கு கண்காட்சிக்கு வர திட்டமிடலாம். ஒரே கல்ல ரெண்டு மாங்கா. :-)

6. முதல்வேலையா என்னென்ன புத்தகங்கள் வாங்கப்போறோம்ன்னு ஒரு பட்டியல் தயார் பண்ணுங்க. புத்தகம் எந்த பதிப்பகத்த சேர்ந்ததுன்னு இணையத்துல தேடி குறிச்சு வச்சுக்கோங்க. ஏன்னா கண்காட்சில பதிப்பகத்த கண்டுபிடிக்கறதே சிலநேரம் கஷ்டமா இருக்கும்.

7. நுழைஞ்சவுடனே பதிப்பகவாரியா ஸ்டால் எண்கள் பட்டியல் இருக்கும். நேர விரையத்த தவிர்க்க விரும்பினால் குறிப்பிட்ட பதிப்பகங்களுக்கு மட்டும் நேரடியா செல்லலாம்.

8. போனதடவ கண்காட்சிக்கு வந்தவங்க அதிகம் பேசியது. சாப்பாடு விலையெல்லாம் ரொம்பவே ஜாஸ்தி. டாய்லெட் எங்க இருக்குன்னே தெரியல. கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு போனாலும் சரியான பராமரிப்பு இல்ல. (சாரு டாய்லெட் பற்றி மட்டுமே இரண்டு பத்திகள் தன் பதிவில் எழுதியதை இங்கே நினைவுபடுத்துகிறேன்). லீவ் நாட்கள்ல மட்டும் பார்க்கிங் ஏரியா ரொம்பவே சிரமப்பட்டது.

9. கைல நீங்க எடுத்துட்டுப்போக வேண்டியது - ஆட்டோக்ராப் வாங்க பேனா, குறிப்பெடுப்பதற்காக ஸ்க்ரிப்லிங் பேட் & அவ்வப்போது தாகம் தணிக்க தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில், ரொக்கம். சில சிறிய பதிப்பக ஸ்டால்கள்ல டெபிட் கார்டு வசதியில்ல. ஆனாலும் மூன்று முதல் நான்கு கடைகள் சேர்ந்து பொதுவா டெபிட் கார்டு கவுண்டர் வச்சிருக்காங்க. எதுக்கு சிரமம்? கைல காசு பைல புத்தகம். :-)

10. இந்தக் கண்காட்சியில் சிக்கனப்படுத்த விரும்பினால் தேடல் அவசியம். சென்றமுறை மீனாட்சி பதிப்பகத்துல சுஜாதா புத்தகங்கள் மலிவுவிலைக்கு விற்றுத்தீர்ந்தது. சிலநேரங்கள்ல அரங்கிற்கு வெளியே இருக்கும் நடைபாதைக்கடைகளில் அரிய பொக்கிசங்கள் கிடைக்கும். சென்ற கண்காட்சியில் ரூபாய் 135 மதிப்புள்ள "புத்தம் வீடு" மற்றொரு பதிப்பகத்துல மலிவு விலைல ரூபாய் 35-க்கு கிடைத்தது.

11. என்னதான் வளர்ந்திருந்தாலும் "டாம் & ஜெர்ரி" பாக்குறப்ப குழந்தையா மாறும் அதே ஃபீல் தான் புத்தக வாசிப்புல காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கறதும். சென்றமுறை லயன் காமிக்ஸ் பதிப்பகம் ஜோரா களமிறங்கி கலக்குனாங்க. காமிக்ஸ் ரசிகர்கள் லயன் காமிக்ஸ் ஸ்டாலை விசிட் அடிக்க மறந்துராதீங்க. குழந்தைகளுக்கேற்ற எண்ணற்ற காமிக்ஸ் கிடைக்குது.

சரி. ரொம்ப அட்வைஸ் பண்ணி மொக்க போடுறமாதிரி இருக்குறதால சுவாரசியமாக்க எனக்கு பிடிச்ச ஐந்து புத்தகங்கள பட்டியலிடறேன் நீங்களும் கமெண்ட்ல உங்களுக்கு பிடிச்ச ஐந்து புத்தகங்கள பட்டியலிடுங்களேன். பிறருக்கு உதவக்கூடும்.

1. கதாவிலாசம் - எஸ்.ரா
2. வந்தார்கள் வென்றார்கள் - மதன
3. சிவகாமியின் சபதம் - கல்கி
4. மரப்பசு - தி.ஜானகிராமன்
5. பண்பாட்டு அசைவுகள்


கண்காட்சி கால அட்டவணை :

இடம் : YMCA Physical Education College Ground,
              Nandanam
              Chennai - 600 035

நாள் : ஜனவரி 11 முதல் 23 வரை

நேரம் : வேலை நாட்களில் 2.30 PM முதல் 8.30 PM வரையும்
                விடுமுறை நாட்களில் 11 AM முதல் 9 PM வரையும்

மேப் :  YMCA - Nandanam

போதிய அளவிற்கு இன்னும் இணைய விழிப்புணர்வு ஏற்படல. நண்பர்கள் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தபின்னர் முடிந்த அளவிற்கு இணையத்தில் பதியவும்.

போறோம்... புத்தகங்கள அள்றோம். கெட்-ரெடி ஃபோல்க்ஸ்.

கருப்பு

17 comments:

  1. அருமை கருப்பு.தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. தங்களின் உதவிகள் தேவை.அதை DM பண்ணுகிறேன்.

    ReplyDelete
  2. Replies
    1. அனுப்பி வைங்க பாஸ். பண்ணிடலாம். :-)

      Delete
  3. Replies
    1. எதுக்குங்க நன்றி? இது நினைவூட்டல். அவ்வளவுதான். :-)

      Delete
  4. BAPASI தளத்தில் அறிவிப்பு வெளியாகிருச்சு. இந்தமுறை நந்தனம் மைதானத்தில் January 11 முதல் 23 வரை நடைபெறுகிறது. மேலதிக தகவல்களுக்கு -> http://www.bapasi.com/2013bookfair_DT.asp

    ReplyDelete
  5. யோவ்.நாட்ல இன்னுமாய இந்த மாறி நல்லவங்க இருக்காங்க."தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அப்டின்னு என்னமா எழுதிருக்காப்ள அசத்திடீங்க மாப்ள.கண்டிப்பா போறேன்.டாட்.

    ReplyDelete
    Replies
    1. அட. அங்க வந்து பாருங்க. நிறைய நல்லவங்கள சந்திக்கலாம். நன்றி மாம்ஸ். :-)

      Delete
  6. கண்டிப்பா சந்திப்போம் மச்சி!!

    ReplyDelete
    Replies
    1. சந்திக்கலாம் மாம்ஸ். :-)

      Delete
  7. இந்த கண்காட்சியில் நாம் படிக்க வேண்டியவை
    1.மணல்கடிகை தமிழினி வெளியீடு
    2 வெக்கை காலச்சுவடு
    3 ஏமாறும் கலை காலச்சுவடு
    4 கி ராஜநாராயணன் கட்டுரைகள் அன்னம் வெளியீடு
    5 இராஜேந்திர சோழன் குறுநாவல்கள் தமிழினி

    TWITTER : kabulivala
    கோகுல்பிரசாத்

    ReplyDelete
    Replies
    1. வாவ். வாங்கிடலாம். நன்றி மச்சி. :-)

      Delete
  8. பிடிச்சதுன்னு இல்லாம இந்த கண்காட்சில கண்டிப்பா வாங்கியே தீரனும்'ன்னு இருக்க 5 புத்தகங்கள்:

    1. வால்காவிலிருந்து கங்கை வரை -ராகுல்ஜி
    2. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)
    3. ஆழி சூழ் உலகு -ஜே.டி.க்ரூஸ்
    4.புலிநகக் கொன்றை -பி.ஏ. கிருஷ்ணன்
    வெட்டுப்புலி -தமிழ்மகன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கிடலாம் மாம்ஸ். ஏற்கனவே சொன்னதுமாதிரி எரியும் பனிக்காடும். :-)

      Delete

தங்கள் கருத்தை பதியவும்...