Wednesday, January 18, 2012

புத்தகங்கள்


இந்த புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் :

1) பொன்னியின் செல்வன் - கல்கி
2) ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்
3) ராஜராஜ சோழன் - ச.ந.கண்ணன்
4) முத்தான முத்துக்கள் - (10 எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு)
5) புதுமைப்பித்தன் முத்துக்கள் பத்து - (புதுமைப்பித்தன் அவர்களின் 10 சிறுகதை தொகுப்பு)
6) உறுபசி - S.Ramakrishnan
7) வாசகபர்வம் - S.Ramakrishnan
8) சில நேரங்களில் சில மனிதர்கள் - Jeyakanthan,
9) புதுமைப்பித்தன் சிறுகதைகள்,
10) ஒரு புளியமரத்தின் கதை - Sundara Ramasamy,
11) இதற்கு முன்பும் இதற்கு பின்பும் - Manushyaputhiran,
12) அணிலாடும் முன்றில் - Na.Muthukumar
13) கோபல்லபுரத்து மக்கள் - Ki.Rajanarayanan,
14) கோபல்ல கிராமம் - Ki.Rajanarayanan,
15) ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Sujatha
16) ஆதலினால் காதல் செய்வீர் - Sujatha
17) ஜெயகாந்தன் சிறுகதைகள்
18) பெரியார் - ஆர்.முத்துக்குமார்
19) நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்
20) எனதருமை டால்ஸ்டாய் - S.Ramakrishnan

Tuesday, January 17, 2012

குடை


மழையில்...
நான் நனையாதிருக்க,
நனைகிறது குடை

Monday, January 16, 2012

எனக்கென ஒரு மழை


மழை நின்றபின்
உன் தலையசைவில்
சிதறிய துளிகளால்

உண்டானதங்கே எனக்கென
ஒரு மழை ...

அஞ்சலி


மண்ணில் விழுந்து மரணித்த
மழைதுளிகளுக்காக
அஞ்சலி செய்கிறது...

அவளை தீண்டி புனிதம் பெற்ற துளிகள்....

உன் மௌனம்


உன்னைபிரிந்து தூக்கமில்லாத
இரவுகளை விட
கொடுமையான தருணம்

நான் அருகில் இருக்கையில்
என்னிடம் சிறுதும் பேசாத
உன் மௌனம்

யாரும் கவனிக்கவில்லை


இருவரும் மாறி மாறி பருகியதில்
மெல்ல குறைந்தது
குளிர்பானம்

யாரும் கவனிக்கவில்லை
நம்மிருவரைதவிர
அங்கே பெருகி வழிந்த
நம் காதலை ...

உன் பிரிவின்போது



உன் பிரிவின்போது
என்னோடே வைத்துகொள்கிறேன்

உன்னை பற்றிய நினைவுகளையும்
கொஞ்சம் கண்ணீரையும்....

அவளை பற்றிய குறிப்புகள்


நாத்திகம் பேசியவன்
ஆத்திகன் ஆனேன்
தேவதை உன்னை சந்தித்தபின்

தேவதைகளின் தேசிய நிறம்
வெள்ளை - ஆயினும்
உன்னை நான் முதன்முதலாக
சந்தித்தது பிங்க் நிறத்தில்தான்
பிங்கையும் பிடிக்க வைத்தாய்
அன்றுமுதல் நீ

பொதுவாய் தேவதைகள்
ஆசிர்வதிக்கும்
ஆனால் உன் பார்வையோ
என்னை சாகடிக்கும்

உன் வாழ்த்திற்காக காத்திருந்து
கிடைக்க பெறாமல்...
ஒவ்வொரு முறையும் சாகிறேன்
என் பிறந்த நாளன்று - ஆயினும்
மீண்டும் பிறக்கிறேன்
ஒரு குருட்டு நம்பிக்கையில்
என்றாவது ஒருநாள்
அது கிடைக்க பெறுமென்று...

தொலைந்து போனவைகள்:


குளத்தில் கல் எறிந்தேன்,
தொலைந்து போனது
எறிந்த கல்லும்,
அங்கு இருந்த அமைதியும்.