Monday, April 16, 2012

காதலிக்கு ஒரு கடிதம் :

இருபத்திமூன்று அகவை
உனக்காய் காத்திருந்த என் மனம்
உன்னைக்கண்ட அந்த நொடியில்
கவலைகள் தீர்ந்து ஆர்ப்பரித்ததை
எப்படி சொல்வதென புரியவில்லை?

எதற்காக புரிய வைக்கவேண்டும்?
அதே நிகழ்தல் உனக்குள்ளும் நடந்திருக்கும்
உண்மைசொல் பெண்ணே...

உன்னை நான் பிரிந்திருந்த வேளையில்
என்னை கடந்து சென்ற
குளிர்காற்றும் என்மேல்
அனலை கக்கியபடி சென்றது

உனைத்துரத்தியது நானா? - அல்லது
என்னைத்துரத்த வைத்தது நீயா?
என்ற கேள்விக்கு...
கடைசிவரையில் பதிலில்லை என்னிடத்தில்
ஆயினும் - உன் ஒற்றைப் புன்னகைக்காய்
உன் காலடி பதிந்த வீதியில்
என் காலம் முழுக்க
சுற்றிவர ஆயத்தமானேன்...

ஒருநொடிதான்... ஆனாலும்
நீ சிந்தும் கடைவிழிப்பார்வைக்காக
தெருவை நீ கடக்கும் வரை
உன்னைப் பின் தொடர்ந்தேன்

நீ கடந்த பின்னும்
அந்த நொடி
என் நினைவில் கடக்காமலிருக்க
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தது
என் மனம்

என் மூளைக்கும் இதயத்திற்கும்
அடிக்கடி பிணக்குகள் வருவதுண்டு...
உனக்கேற்றவன் நானல்ல
இது மூளையின் சொல்...
உனக்கே உனக்கென உருவானவன் நான்
இது இதயத்தின் சொல்...
இப்போது புரிகிறதா? நான் ஏன்
இதயத்தின் சொல்லையே
கேட்கிறேன் என்று...

என்னால் வானவில்லை வளைக்கவோ
மலையை பெயர்க்கவோ இயலாது
ஆயினும் என்னையே உனக்காகத்
தர இயலும் - ஆனால் நீ மறுக்கிறாய்...

நீ மறுப்பது என்னையா? அல்லது என் காதலையா?
இரண்டும் ஒன்றுதான்...
என் கவிதைகள்கூட உன்னை
காதலிக்க ஆரம்பித்துவிட்டது...

நான் உன்னைத்துரத்துவது என் காதலை - நீ
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல...
என்னைவிட உன்னை யாரும்
இவ்வளவு நேசிக்கமுடியாது என்பதை
நீ தெரிந்துகொள்ளத்தான்

அது சரி... பெண்களுக்கு தெரிந்தும் தெரியாததுபோல்
இருப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ?

என்றும் அன்புடன்,
என்றாவது ஒருநாள் என் காதலை
நீ ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையுடன்
"காதலை காதலிக்கும்"
அன்பு உள்ளம்.

Thursday, April 12, 2012

கவிதையும் எதிர்கவிதையும் -II

வெற்றிகரமாக "கவிதையும் - எதிர்கவிதையும்" அடுத்தபாகம் தயார். இதோ உங்கள் பார்வைக்காக...

ட்விட்டரில் ஒரு கீச்சுக்கு எதிர்கீச்சு வருவது இயல்பு. ஆனால் ஒரு கவிதை கீச்சுக்கு எத்தனை எதிர்கீச்சுகள்? ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, நான்கூட கொஞ்சநேரம் யோசிச்சு கவுஜ கீச்சுவேன். ஆனா நான் கீச்சிய அடுத்த நொடியே அதற்கான எதிர்கீச்சு டைம்லைனில் வந்து விழும். நீங்களே படிச்சு பாருங்க.

என்ன வேடிக்கைன்னா என்ன பாலோ செய்த சில நாட்களில் ட்விட்டர் உலகின் சூப்பர் ஸ்டார் தோட்டா அண்ணன் ரொம்ப நொந்துட்டார். பாருங்க அவர் எந்த அளவுக்கு நொந்து போயிருக்காருன்னு.


தோட்டா அண்ணனும் விட்டபாடா இல்ல. என்னோட கீச்சுக்கு அவரும் எதிர்கீச்சு போட்டு துவம்சம் பண்ணிட்டார். இதோ

கவிதை :


எதிர்கீச்சு:


என்னை திருத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் நான் திருந்தல. என்ன திருத்தறதுக்கு பதிலா, மத்தவங்களையாவது எச்சரிப்போம்ன்னு அவர் கீச்சிய கீச்சு தான் இது.


அந்த அளவுக்கு எல்லாரையும் கொலையா கொன்னுருக்கேன். மத்த எதிர்கீச்செல்லாம் படிங்க. வயிறு வலிக்க சிரிப்பது உறுதி.

கவிதை :


எதிர்கீச்சுகள்:




கவிதை :


எதிர்கீச்சுகள்:




கவிதை :


எதிர்கீச்சுகள்:




கவிதை :


எதிர்கீச்சுகள்:






கவிதை :


எதிர்கீச்சுகள்:





கவிதை :


எதிர்கீச்சுகள்:





(குறிப்பு : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிப்பதற்காக மட்டுமே)