கார்த்திக். அழகென்று சொல்லமுடியாத அளவுக்கு இல்லாவிட்டாலும் சுமாரான அழகு. சென்னை மாநகர் தத்தெடுத்த கோடியில் ஒருவனாய் வெகு சமீபத்தில் இணைந்தவன். சோம்பேறி பேச்சுலர். ஞாயிறன்று ரூம்ல நடந்த ஏதோவொரு களேபரத்துல தூக்கம் களைந்து... மறுபடியும் தூங்கலாமா இல்ல எந்திச்சுறலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்குறப்ப... அவன் செல் சிணுங்கி இவனை எழுப்பி உட்கார வைத்தது. எடுத்து காதோரம் வைத்தபடி ஒரு "ஹலோவை" உதிர்த்தான். எதிர்ப்புறத்தில் இரண்டொரு நிமிடம் நீடித்த மௌனம் அதன்பின் இவனை பல "ஹலோக்கள்" உதிர்க்க வைத்தது.
மௌனம் உடைந்து வெளிப்பட்டது எதிர்ப்புறம் ஓர் இனிமையான பெண் குரல். உண்மையில் பெண்குரல் கேட்டதும் இவனுக்குள் "கிக்". கார்த்திக்கை பொறுத்தவரை தன்னை யோக்கியனாக காட்டிக்கொள்ள நினைக்கும் அடிமுட்டாள். பெண்கள் எதிரில் வந்தால் பார்வையை வேறு பக்கம் திருப்பி கடந்துவிடுவான். ஆனால் கடந்தபின் கள்ளத்தனமாய் அதே பெண்களை கிட்டத்தட்ட நினைவுகளால் கற்பழித்துக் கொண்டிருப்பான். பெண்கள் விசயத்தில் தன் தாழ்வு மனப்பான்மையை மறைக்க இவனுக்கு இந்த யோக்கியன் திரை அவசியமாகப்பட்டது. இப்படிப்பட்டவனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து திடீரென அழைப்பு வந்ததில் அவனுக்கே ஆச்சர்யம்தான்.

ஹலோ... கார்த்திக்?
ஆமா நான் கார்த்திக் தான் பேசுறேன். சொல்லுங்க. நீங்க?
நான் ப்ரியா பேசுறேன். பெருந்துறைல ஒண்ணா வொர்க் பண்ணோமே ஞாபகம் இருக்கா?
(பழைய கம்பெனில இவனோட ப்ரியாங்கற பேர்ல நிறையப்பேர் வேலை செஞ்சதால யார்ன்னு இவனால டக்குன்னு ஞாபகப்படுத்த முடியல.)
"ஓ! சரியா ஞாபகம் இல்லையே. சொல்லுங்க. எந்த ப்ரியா?" என கார்த்திக் கேட்டு முடிப்பதற்கும் ப்ரியா அழ ஆரம்பித்ததற்கும் சரியாக இருந்தது.
அட! ஏன் அழறீங்க? முதல்ல அழறத நிறுத்துங்க. என்னாச்சு?
______
சொல்றேன்ல... முதல்ல அழாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க. ஹலோ...
இல்ல கார்த்திக். எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நாளைக்கு எனக்கு கல்யாணம்.
கார்த்திக் சந்தித்த முதல் இடி இது. அதுவரை இவனுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த வயலின் சத்தம் "மியூட்டானது".
கொஞ்சம் குரலை வரவழைத்துக் கொண்டு...
ஓ! வாழ்த்துகள். அப்புறம் ஏன் அழறீங்க? சந்தோசமால்ல இருக்கணும்?!
இல்ல கார்த்திக். இத எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. நாளைக்கு எனக்கு கல்யாணம். அதுக்குள்ள உங்ககிட்ட இத சொல்லிட்டா என்கிட்ட இருக்குற பாரத்த இன்னையோட இறக்கிவச்ச மாதிரி இருக்கும்.
ம்ம்... சொல்லுங்க.
நீங்க கம்பெனில ஜாயின் பண்ண ஆரம்பத்துல இருந்தே உங்கள எனக்கு பிடிச்சிருந்தது. ஒன்னரை வருசமா நான் உங்கள லவ் பண்ணேன்.
தனக்கு காதலியே இல்லைன்னு வருத்தப்பட்ட ஒருத்தனுக்கு நாளைக்கு கல்யாணத்த வச்சிட்டு இத்தனை நாள் காதலிச்சதா ஒரு பொண்ணு சொன்னா எந்த அளவுக்கு வலிச்சிருக்கும். நம்ம ஆளுக்கு இது இரண்டாவது இடி. யார்றா இவ லூசு? இத ஏன் முதல்லையே சொல்லலன்னு அவனுக்குள் ப்ரியாவைப்பற்றி கோபமாய் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது.
நிஜமாவே இப்ப கார்த்திக்குக்கு ஆக்ஸிசன் தேவைப்பட்டது.
மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தான்.
என்ன சொல்றீங்க? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம். இப்ப சொல்றீங்க?
ம்ம்... இப்ப கூட சொல்லிருக்க மாட்டேன். ஆனா மனசு உறுத்தலா இருந்தது. இப்ப சொல்லாட்டி வேற எப்பவுமே சொல்லமுடியாது. மனசு கேக்கல. அதான்.
____
என்னால முடியலைங்க. விம்மலில் தொடங்கி உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள் ப்ரியா.
இரண்டு இடிகள் சந்தித்த காரணத்தால் இதுவரை சமாதானம் செஞ்ச நம்ம ஆளுக்கு கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அழுததற்கு முழுக்க முழுக்க "வட போச்சே" காரணம்தான். யாருக்கு யார் சமாதானம் செய்றதுன்னு அவங்களுக்குள்ள குழப்பமே வரல. பாரபட்சமே இல்லாம இரண்டு பக்கமும் அமைதி... அழுகை... அமைதி... என சுழற்சிமுறை நடந்துகொண்டிருந்தது.
முதலிலேயே காதலை சொல்லாமல் விட்டதற்காக ப்ரியாவும்... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு இப்ப சொல்றாளேன்னு கார்த்திக்கும் ஜீரணிக்க ஏதேனும் வழி உண்டா எனத்தேடி வேறு வழியில்லாமால் கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.
லைட் ப்ளூ கலர் சர்ட்டும் கருப்பு பேன்ட்டுமாய் இவன் கம்பெனியில் நுழைந்தது முதல்... கம்பெனிய விட்டு போனது வரைக்கும் சொல்ல நிறைய சம்பவங்கள் இருந்தது ப்ரியாவிடம்.
சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டு பெரும்பாரம் இறக்கிய நிம்மதியில் கண் துடைத்தபடி அழைப்பை துண்டித்தாள் ப்ரியா. அவள் இறக்கிவைத்த சுமையை அவளுக்காய் இன்றும் சுமந்து கொண்டிருக்கிறான் கார்த்திக்.
தன்னை ஒரு பொண்ணு இப்படி விரட்டி விரட்டி லவ் பண்ணியிருக்கான்னு இதோ இப்ப நினச்சாகூட கார்த்திக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு. இந்த சம்பவம் நடந்து முழுசா ரெண்டு வருசமாச்சு. ப்ரியாவோட குழந்தைக்கு
முதல் பிறந்தநாளும் முடிஞ்சுருச்சு. நம்ம ஆளுதான் இன்னும் ப்ரியான்னு யார்
அறிமுகமானாலும் சோகப்பார்வை வீசிக்கொண்டும்... ஃபீலிங்க்ஸ் பாட்ட மொபைல்ல
கதறவிட்டு திரியுறார். உலகத்துலயே ஒரே ஒரு ஃபோன் கால்ல ஆரம்பிச்சு... முடிஞ்சு... நினைவுகளில் தொடர்ற காதல்கதை நம்ம கார்த்திக் உடையதாகத்தான் இருக்கும்.
இதெல்லாம் கூட பரவால்ல. ப்ரியான்னு பேர் இருக்கிற எல்லாரும் அழகென்றும், 'Priya'ங்கா சோப்ரா கூட அந்த பேராலதான் உலக அழகியா ஆனாங்கன்னு சண்டை வேற. டேய் பிரியங்கா வேற ப்ரியா வேறன்னு சொன்ன ஒருத்தன்கூட ரெண்டுமாசமா, சரக்கு ட்ரீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்துனவன முறைக்கிறமாதிரி கோபமா லுக்கு விட்டுகிட்டு திரிஞ்சான்.
சரக்குன்னு சொல்லவும்தான் ஞாபகம் வருது. அப்பப்ப பீர் பாட்டில கைல புடிச்சிட்டு அலையுறார் நம்ம திருவாளர் கார்த்திக். இவன்கூட தண்ணியடிச்ச எல்லாருக்கும் இவனோட லிமிட் தெரியும். ஆமா. சரியா "அவ போய்ட்டா மச்சான்"னு ஆரம்பிச்சாலே அத்தோட பீர் ஊத்துறத நிறுத்திருவாங்க. பீ கேர்புல். எங்கயாவது "அவ போய்ட்டா மச்சான்..."னு யாராவது எதிர்பட்டா அது கார்த்திக்காகவும் இருக்கலாம்.

யூ மீன் கார்த்திக் கருப்பையா?
ReplyDeletesame doubt?
ReplyDeleteme too :-))
ReplyDeleteகருப்பையா (எ) கார்த்திக் :-)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ். 'ராஜா ராணி' நான் அழுவலியே... கண்ல வேர்த்திருக்கு moment. :-D
ReplyDeleteஅதே டெய்லர் அதே வாடகை! :)))) @பார்த்தா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅவன் நண்பனா கிடைக்க, அனிருத் என்ற ராட்சசன் இதையும் படிச்சேன் இங்க மட்டும் கமெண்ட் போட்டுக்கிறேன்... என் பங்கிற்கு, "ப்ரியா என்ற பெயர் கொண்ட பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது உண்மைதான் அதே சமயம் நான் பார்த்த ப்ரியாக்கள் அனைவரும் புத்திசாலிகளும் கூட' உனக்கு எத்தன ப்ரியாவ தெரியும்னு கேட்க கூடாது.... :) ஆனா ஒரேயொரு கார்த்திய தெரியும் அவன நாங்க வினுனு கூப்டுவோம்
ReplyDeleteஹா ஹா...
DeleteRomba emotionala read panitu irunthen.. Vada poche la sathama sirichuten... aazhntha nandrigal Thambi !!!
ReplyDelete:-))))))))))))))
Deleteஉங்கள மாதிரியான வளரும் எழுத்தாளர்கள் இன்னும் நிறைய படிக்கனும்.. புத்தகங்கள, வாழ்க்கைய.. காதலிக்கறதே கதை எழுதுறதுக்கும், கவிதை எழுதுறதுக்கும் தான..
ReplyDelete- அன்பு வணக்கங்களுடன், வெள்ளக்காரன்