ஏன் புத்தகம் வாசிக்கனும்?
புத்தகம் படிக்கறதால என்ன நன்மை?
சில காலத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கும் இந்த கேள்விகள்லாம் இருந்தது. வாசிப்பு பழக்கம் சமீபத்துலதான் எனக்கு வந்தது. பதிலும் கிடைச்சது.
புத்தக வாசிப்பின் நன்மைகள்:
"பச்சை கலர் துப்பட்டா காத்துல பறந்துபோய் அவனது முகத்தில் விழுந்தது. இடது கையால் அதை எடுக்கும்போது அவனது வாட்ச் சூரிய ஒளியில் பட்டு பிரகாசித்தது"
மேற்சொன்ன இந்த வாக்கியத்த படிக்கறப்ப வாலி படத்துல சிம்ரன் அஜீத்த ஊட்டி சீன்ல கற்பனை பண்ணமாதிரி பச்சை கலர் துப்பட்டா பறக்குறமாதிரியும்... முகத்தில விழறதுமாதிரியும் கற்பனை பண்ணிருப்பீங்களே. இதாங்க புத்தக வாசிப்பின் முதல் நன்மை. புரியலையா? ஆமாங்க. இப்படி உங்களோட கற்பனை பண்ற சக்திய வளர்க்குறதுதான் புத்தக வாசிப்பின் முழுமுதல் நன்மையே. பொதுவா அமெரிக்கர்கள் டெலிவிசன அதான் TV-ய "இடியட் பாக்ஸ்" அப்படின்னு தான் சொல்வாங்க. ஏன்னா மேற்சொன்ன அதேகாட்சிய அது விஷுவல்-ல காமிச்சுரும். உங்கள கற்பனையே பண்ணவிடாது. அதனாலதான்.
புத்தக வாசிப்பு உங்கள இன்னொரு காலத்துக்கு... ஏன் இன்னொரு உலகத்துக்கே கொண்டுபோயிரும்... அதுவும் பைசா செலவில்லாம. பொன்னியின் செல்வன் படிச்சவங்களுக்கு இது நல்லாவே தெரியும். கிட்டத்தட்ட அந்த புக் படிக்குறப்ப ராஜ ராஜ சோழன் காலத்துக்கே போய் அவங்களோட இருந்துட்டுவந்த அனுபவம் இருக்கும். ஹாரி பாட்டர் தான் படிச்சேன்னு சொல்றீங்களா? உங்களுக்கும் அதேதான். ஹாரி பாட்டர் பக்கத்துல நின்னு சாகச காட்சிகள் பார்த்திருப்பீங்களே!
ஒரு புத்தகம் படிக்கறீங்கன்னு வைங்க. உதாரணத்துக்கு கதை படிக்கறதா வச்சுக்கலாம். கதைல வர்ற எல்லா கதாபாத்திரமும் உங்க கற்பனைல ஓடும். எல்லா கதாபாத்திரங்களோட உணர்வும் உங்களால புரிஞ்சுக்க முடியும். நிஜ வாழ்க்கைல இதேமாதிரி சம்பவங்கள் நடக்குறப்ப உங்களால மற்றவர்கள் உணர்வ எளிதில் புரிஞ்சுக்க இந்த வாசிப்பனுபவம் உதவும்ன்னு ஆய்வு சொல்லுது.
எகிப்து அப்படின்னதும் எப்படி பிரமிட் மற்றும் மம்மி ஞாபகம் வருதோ அதமாதிரிதான் புத்தக வாசிப்பு ஒரு நாட்டோட கலாச்சாரத்த கண்முன்னாடி கொண்டுவருது. யோசிச்சுப்பாருங்க உட்கார்ந்த இடத்துல இருந்தே உலகத்தையே சுற்றி வரமுடியும். எல்லா நாட்டு மக்களோட கலாச்சாரத்தையும் தெரிஞ்சுக்க முடியும்.
செஸ் அதிகம் விளையாடுன்னா "Decision Making Power" அதிகமாகும்ன்னு சொல்லுவாங்க. அதுமாதிரிதான் வாசிப்பு உங்களுக்கு பல்வேறு விசயங்களையும் அறிவையும் ஊட்டும்.
ரயில் பயணத்தில் நண்பர்கள் கிடைப்பதுபோன்றே பலரின் தனிமைக்கு சிறந்த நண்பன் புத்தக வாசிப்பு. உதாரணத்துக்கு என்னையே சொல்லலாம். இடைப்பட்ட ஒருவருடம் நான் மட்டும் தனியா இருக்க வேண்டியிருந்தது. அப்ப புத்தகங்கள்தான் எனக்கு சிறந்த துணை.
இதற்கு முன்னர் எழுத்தைப்பற்றியும் வாசிப்பைப் பற்றியும் எழுதிய குறும்பதிவு : Facebook - Post
நல்ல முயற்சி நண்பரே..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
நன்றி மாப்பி. எங்க ஆளையே காணோம்!
Deleteகாலத்தின் முப்பரிமாணத் தோற்றத்தினை (3D effect) நான் பொன்னியின் செல்வன் படிக்கும்போது உணர்ந்தேன்..குதிரைக் குளம்பொலிச் சத்தங்களும் ஆழ்வார்க்கடியானின் ஆவேச வைணவப் பேச்சுக்களும் அருள்மொழிவர்மரின் வாள் வீச்சொலிகளும் என் காதுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன… நினைவூட்டலுக்கு நன்றி…
ReplyDeleteநிஜமாங்க. அது ஓர் அற்புத உணர்வு. :-)
Delete//புத்தக வாசிப்பு உங்கள இன்னொரு காலத்துக்கு... ஏன் இன்னொரு உலகத்துக்கே கொண்டுபோயிரும்... அதுவும் பைசா செலவில்லாம. பொன்னியின் செல்வன் படிச்சவங்களுக்கு இது நல்லாவே தெரியும். கிட்டத்தட்ட அந்த புக் படிக்குறப்ப ராஜ ராஜ சோழன் காலத்துக்கே போய் அவங்களோட இருந்துட்டுவந்த அனுபவம் இருக்கும். //
ReplyDeleteஉண்மை! உண்மை! உண்மை ! பொன்னியின் செல்வன் வாசித்த அந்த ஒரு வார காலமும் நான் அந்த காலத்திலேயே வாழ்ந்தேன் . பார்ப்பவர்களிடேமெல்லாம் வந்தியத்தேவனையும் , அருள்மொழிவர்மனையும் தேடினேன் . அது ஒரு ஏகாந்த அனுபவம் .
உண்மைங்க. நானும் கூட அப்படியேதான். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
DeleteUnmaithan nanpa....... Thanimai,il enakku puthagam,than thunai.
ReplyDeleteEnakkum. :-)
Delete:-) நிறைய வாசிக்கறீங்க, கொஞ்சமா எழுதறீங்க. சந்தோஷமா இருக்கீங்க, வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஹா ஹா... நன்றி மாப்பி. :-)
Delete