Monday, March 4, 2013

ஊடல் பொழுது



தேநீர்க் கோப்பைகள் உருண்டோடும்
முகம் காட்ட மாட்டாய்
ஜன்னல் வழி கள்ளப்பார்வை வழியனுப்பும்
மாலை மேஜையில் காபி தனித்திருக்கும்
அழைத்தால் மறந்தும் திரும்பமட்டாய்
உன் ஊடல் பொழுதுகளில்...

ஒரு முத்தம்
ஒரு வெற்று குறுஞ்செய்தி
கொஞ்சம் சின்னதாய் மழைத்தூறல்

இதிலொன்று போதும்
ஊடல் முடித்து உன்னை வசப்படுத்த

எதுவுமில்லையா? போ போ...

நானும் முகம் திருப்பிக்கொள்வேன்
பின் நீ கெஞ்சவேண்டியிருக்கும்.

2 comments:

  1. இனிமையான விளையாட்டு தான்...

    ReplyDelete
  2. கெஞ்சுவதும், கொஞ்சுவதும் ஊடலில் சகஜம் தானே மாப்பி :-)

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...