Sunday, December 9, 2012

நிழலுக்கு தெரிந்திருக்குமா?!





செல்லச்சண்டையில்
என்னிரு தோள்களை
நீ தாளமிசைத்து
சோர்வடைந்த கணத்தில்

வெற்றி தோல்வியின்றி
நடுநிலை பறைசாற்றி
இதழ்கூட்டி முத்தம் தரித்தோம்

மையப் புன்னகையால்
அடுத்த வலைவிரிக்கிறாய்

சுட்டிக்காட்டினாய்...
விளக்கணைத்து
விரட்டியடித்தேன்
உன்னுடல் ஏறிய
என் நிழலை

மில்லியன்களுடன் போட்டியிட்டு
ஒற்றை அணுவாய் நான் வென்றது
உன்னுடல் பற்றத்தானோ?!

பற்றிக்கொள்...
என் முதுகு உனக்கொரு
ஆகச்சிறந்த பற்றுச்சுவர்.
விருப்பம் போல்
நகக்கீரல்களிட்டு
வண்ணம்பூசு.

இருளின் பக்கங்களில்
சிதறிக்கிடந்த வார்த்தைகளில்
எது நீ? எது நான்?

பதினொன்றா? பனிரெண்டா?
எண்ணிப்பார்க்கவில்லை
கடிகார முட்கள்
புணர்ந்தபின் ஒலித்த
மணிச்சத்தத்தை

எல்லாம் முடிந்தபின்
பற்றவைக்கிறேன்
சிகரெட் ஒன்றை...
வெண்புகை சூழ்கிறது

தின்றது போக
எஞ்சிக் கிடக்கிறது
அறையெங்கும் காமம்

மீண்டும் ஒளி.
நடந்தவை யாவும் தெரியாது
அறையின் எச்சங்களை
வேடிக்கைபார்த்தபடி
வந்துசேர்கிறது என்னோடு நிழல்

கொஞ்சம்
இளைப்பாறிக்கிட
தேநீர்க்கோப்பையோடு
திரும்புகிறேன்

14 comments:

  1. கவிதை எழுதி வெகு நாட்களாகிறது கருப்பு எழுதவேண்டுமென்று என்னை தூண்டுகிறாய்...

    ReplyDelete
    Replies
    1. ஆ! ரொம்ப மகிழ்ச்சி மாம்ஸ். எழுதி ரொம்ப நாளாச்சேன்னுதான் மாம்ஸ் நானும் சும்மா எழுதுனேன். சீக்கிரம் நீங்களும் எழுதுங்க. :-))

      Delete
  2. தேனீர் தான் உங்களுக்கு பூஸ்டு போல

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தேநீர் ரொம்ப புடிக்கும்ங்கறது உண்மைதான். ஜென் தத்துவத்தில் தேநீருக்கு முக்கிய இடம் உண்டுங்க. இந்த இடத்துல கணவன் மனைவிக்கு தேநீர் கொண்டு வர்றது அவள்மேல இருக்குற அன்பைக்குறிக்குது. :-)

      Delete
  3. நல்லா இருந்துச்சுங்க.. மொத மொறையா உங்க கவித படிக்கறேன்..

    ReplyDelete
  4. ஒருமாதிரி பிரமிப்பா இருக்கு, பாராட்டுகள் :-)
    ---- @GaneshVasanth

    ReplyDelete
  5. கட்சியா டீக்கிளாஸ கைல புடிச்ச பாத்தியா! அங்க நிக்கிற. :))) ஸூப்பரு

    ReplyDelete
  6. @Ragu :-)))

    @GaneshVasanth - ஹா ஹா... நன்றி. :-)

    @jeganjeeva - :-D

    ReplyDelete
  7. காமத்தை பற்றியதாக இருந்தாலும் கொச்சையாக தெரியாததே இந்த கவிதையின் அழகு

    ReplyDelete
  8. //பதினொன்றா? பனிரெண்டா?
    எண்ணிப்பார்க்கவில்லை
    கடிகார முட்கள்
    புணர்ந்தபின் ஒலித்த
    மணிச்சத்தத்தை//

    இதான் "குறியீடா" கவிஞா?:)

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ். முருகா. :-)

      Delete

தங்கள் கருத்தை பதியவும்...