Sunday, February 19, 2012

தமிழாசிரியர் சுந்தரம்


அறிமுகம் :

நம் கதையின் நாயகன் திரு.சுந்தரம் அவர்கள். தமிழாசிரியராய் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். தன் மகன் மற்றும் பேரக்குழந்தைகளோடு தங்குவதற்காய் சென்னை வந்துவிட்டார்.


இனி கதையின் உள்ளே:

சில வருடங்களுக்கு முன்...

வகுப்பு தொடங்குவதற்கான மணியோசை ஒலிக்க ஆரம்பித்தது...

வெள்ளை உடையில், நெற்றி முழுக்க விபூதியுடன் தமிழ் ஆசிரியருக்கே உரித்தான தோரணையுடன் "வணக்கம் ஐயா" என்ற மாணவர்களின் வணக்கத்தோடு வகுப்பிற்குள் நுழைந்தார் சுந்தரம்...

தான் கையோடு கொண்டுவந்த புத்தகத்தை மேசைமீது வைத்துவிட்டு "எல்லாரும் எழுந்து நின்று கடவுள் வாழ்த்து சொல்லுங்க" என்று உத்தரவிட்டார்.

தினமும் சொல்லி சொல்லி மனப்பாடம் ஆன கடவுள் வாழ்த்தை ஒலிக்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.

பாடி முடித்தவுடன்... "பசங்களா... இன்னைக்கு நாம படிக்கப்போற பாடம் "திரிகடுகம்". திரிகடுகம்ன்னா என்னன்னு தெரியுமா? திரி என்றால் மூன்று ; கடுகம் என்றால்...." "டேய் செந்திலை எழுப்பிவிடு. வகுப்பு ஆரம்பிச்ச உடனே தூக்கமா? சொல்லு... திரி என்றால் என்ன?" மாணவன் "திரு திரு" என்று முழித்தான். திரின்னா என்னன்னு தெரியாதா? என்று கேட்டவாறே மாணவனின் காதை பிடித்து திருக ஆரம்பித்தார்."


 இன்று :

ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின், தன் பேரக்குழந்தைகளோடு நேரத்தை செலவிடுவதையே மகிழ்வாக கொண்டிருந்தார். இருக்காதா பின்ன? பள்ளியில் 50 முதல் 60 குழந்தைகளோடு நேரத்தை செலவிட்ட அவரால் குழந்தைகள் இன்றி இருக்க முடியுமா? அவர் தன் பேரக்குழந்தைகளோடு இருப்பதற்காகவே கிராமத்தில் இருந்து சென்னை வந்துவிட்டார்.


பள்ளியில் இருந்து பேரனும் பேத்தியும் திரும்பியவுடன் அவர்களுக்கு வீட்டுப்பாடம் முடிக்க உதவி செய்வது சுந்தரத்தின் வழக்கம்.

தன் பேத்திக்கு அன்று தமிழ்ப்பாடத்தின் திரிகடுகம்தான் வீட்டுப்பாடம். குழந்தையை படிக்க வைத்த சுந்தரம் ஐயா ஒரு ஆர்வத்தில் "திரின்னா என்னன்னு தெரியுமா? என்று பேத்தியிடம் கேட்டார்.

குழந்தை அதற்கு "திரின்னா மூன்று" என்று சரியாக பதில் அளித்தவுடன் சுந்தரம் ஐயாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகம் முழுவதும் மகிழ்ச்சியின் ரேகைகள். தன் பேரக்குழந்தைக்கும் தமிழ் நன்றாக தெரிந்திருக்கிறது என்று உள்ளத்தில் நெகிழ்ச்சியானார்.

ஆனால் குழந்தை மேலும் தொடர்ந்தது ... "திரின்னா மூன்று... ஃபோர்ன்னா நாலு, ஃபைவ்ன்னா அஞ்சு" என்று கூறிக்கொண்டே போக தாத்தாவின் முகத்தில் அதுவரை தென்பட்ட சந்தோசம் மறைந்து... முகம் முழுவதும் கவலை ரேகைகள் படர ஆரம்பித்தன.

அன்று மாணவனின் காதை திருகிய விரல்கள் இன்று கண்ணீரைத்துடைக்க முற்பட்டன.

(நிறைவு)


Note : இது என் முதல் சிறுகதை முயற்சி. இரண்டு வருடத்திற்கு முன் எழுதிய இந்தக்கதையை இப்போதுதான் என் ப்ளாக்கில் பதிவேற்றம் செய்கிறேன். திரி என்றால் தமிழில் மூன்று. ஆங்கில வார்த்தையான த்ரீ என்பதற்கும் மூன்று என்றே பொருள். இரண்டு வார்த்தைக்கும் உள்ள இந்த சிறு ஒற்றுமையை வைத்து, தற்கால ஆங்கில மோகத்தையும் நம் தாய்மொழியை நாமே மறந்த சோகத்தையும் எழுத முயன்ற ஒரு பதிவுதான் இந்த சிறுகதை. உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும்.

24 comments:

  1. இங்கிலீஷ் த்ரீ...தமிழ் திரி -இந்த சின்ன மேட்டரை வெச்சி சிறுகதை எழுத ட்ரை பண்ணியிருக்க.. அதும் சின்ன வயசுலேயே.. பெரிய விஷயம்.. நல்லாருந்துச்சி மாப்பி..தொடர்ந்து எழுதிட்டே இருடா..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாம்ஸ். எல்லாம் உங்கள் ஆசி. :-))

      Delete
  2. நல்ல சிறுகதை! வாழ்த்துக்கள் :) மொழிகளின் ஒற்றுமையோடு ஒரு நல்ல திருப்பத்தை கதையில் தந்துள்ளீர்கள்.
    amas32

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அம்மா. நிஜமாவே உங்கள் வாழ்த்தை கண்டு சந்தோசமா இருக்கு. :-))

      Delete
  3. கதை ரொம்ப நல்லா இருக்கு!!

    'திரி' என்கிற வார்த்தையை ஒரு திரியாக வைத்து அருமையாக ஒரு கதை எழுதி இருக்கீங்க!!

    (பி.கு: 1,2,3 என எண்ணும் சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு திரிகடுகம் சொல்லித் தருவார்களா?)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க. :-))

      Delete
  4. நன்றாக எழுதி இருக்றீங்க பாஸ்.. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்- @uyarthiru420

    ReplyDelete
  5. nalla muyarchi !!!!!!!! -@elanthirian

    ReplyDelete
  6. சிறு கதை எழுதும் முன் , அதில் ஒரு நாட் இருக்க வேண்டும் என முடிவு எடுத்து முயற்சித்தது அருமை. குமுதத்தில் வரும் ஒருபக்க கதைக்கான தகுதி இதற்க்கு உண்டு என்பது என் கருத்து. வாழ்த்துக்கள் கருப்பு. இது போன்ற ஷார்ட் ஃபார்ம் கதைகளுக்கு முயற்சிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. உங்கள் ஆசிர்வாதத்தால் மென்மேலும் முயற்சி செய்கிறேன். :-))

      Delete
  7. சிறந்த முயற்சி - நல்ல வேளை - "திரி" க்கும் "திரிஷா"வுக்கும் கனெக்க்ஷன் குடுக்காம விட்டீங்களே ...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி... "திரி" - "திரிசா" ரெண்டுக்கும் ஏதோ லிங்க் இருக்கறமாதிரியே தோனுதே... ஹிஹி:-))

      Delete
  8. கலக்கல் மாம்ஸ் :))

    ReplyDelete
  9. ஏன் மாப்பி என்கிட்டே எல்லாம் சொல்ல மாடீன்களோ,
    சரி விடு
    நல்ல முயற்சி; கதைக்கு எதுக்கு கட்டுரை மாதிரி தலைப்பு.அடியேனின் யோசனை இனிமேல் வைக்காத. மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மச்சி, நீ வந்ததும் சொல்லலாமுன்னு இருந்தேன். இனிமே உன் யோசனைப்படி தலைப்பு எதுவும் வைக்கல. நன்றி மச்சி. :-))

      Delete
  10. வருங்கால சுஜாதா.. எழுத்துல சுனாமி, எளக்கியபுயல் :)) எல்லாம் நீதான் ராசா :))

    ReplyDelete
    Replies
    1. அவ்வ். நன்றி அக்கா. :-))

      Delete
  11. நக்கல் நையாண்டியோட மொழியில் புகுந்து விளையாடி வந்திருக்கீக..! வேற வழி .. "மயிலக்கா" சொன்னதை நானும் வழி மொழிகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... நன்றி அண்ணா :-))

      Delete
  12. நல்ல முயற்ச்சி.அந்த பொண்ணு திரி என்றால் முன்று என்று சொல்கின்ற அந்த பகுதி ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துகள் :)

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...