Tuesday, January 28, 2014

சிதம்பர நினைவுகள்

ஆற்றில் விழும் அரச இலையை தன்னோடு அடித்துச் செல்வதுபோல சில புத்தகங்கள் அதன் போக்கில் நம்மை உடன் அழைத்துச் சென்றுவிடும். அப்படிப்பட்ட புத்தகமொன்றுதான் சிதம்பர நினைவுகள்.

வெறுமையான தனித்த ஒரு பொழுதில் வாசிப்பதற்காக புத்தகக்கட்டில் தேடியெடுத்து, கொஞ்சம் வாசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். நம்பமாட்டீர்கள், அமர்ந்த அதே இடத்தில் இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் வாசித்து முடித்திருந்தேன். பொதுவாக என்னைக் கவர்ந்த புத்தகத்தை மட்டுமே இப்படி வாசிப்பதுண்டு.
 

இதை கட்டுரைத் தொகுப்பு என்பதைவிட ஒரு கவிஞனின் குறுக்குவெட்டுத்தோற்ற சுயசரிதை எனலாம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. கேரளக் கவிதையுலகத்தின் முக்கியமான பெயர். தன் வாழ்பனுபவங்களை கைகளில் தெள்ளிய நீரைப்போல் அள்ளி நம் முன்னே காண்பிக்கிறார் இதில்.

தமிழாக்கம் செய்த கே.வி.ஷைலஜா மேடத்தை அடுத்தமுறை புத்தகக் கண்காட்சியில் நேரில் பார்த்து நன்றி சொல்லவேண்டும். அவ்வளவு கனகட்சித தமிழாக்கம்.

தன் தந்தையிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியது முதல், தனியறையில் இளம்பெண்ணின் அருகாமையில் ஏற்பட்ட சபலத்தில் இடுப்பில் கைவைத்ததை எண்ணி வருந்துவதாகட்டும், கையில் காசில்லாமல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பிச்சைக்காரன் எனக்கொடுக்கும் சோறை உண்ணும்போது இவரைத் தெரிந்திருந்த பெண்ணைப் பார்த்து தயக்கத்தோடும் பசியோடும் மீதிச்சோறை உண்பதாகட்டும்... இப்படி இன்னும் எத்தனை "ஆகட்டும்" சேர்த்துக் கொண்டு சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்பனுபவங்கள் அனைத்தையும் ஒளிவுமறைவின்றி நம் கண்முன்னே வைக்கிறார்.

மழைக்காலத்தில் பாறையிடுக்கில் கசியும் நீரைப்போல எனக்குள்ளே ஜில்லென்றிருக்கிறது. எதையோ இறக்கிவைத்த நிம்மதி. எதனிலிருந்தோ விடுபட்ட ஆசுவாசம் இதைப்படித்து முடித்ததும். சில புத்தகங்களை தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிப்பேன். அந்தப்பட்டியலில் இப்புத்தகமும் இடம்பிடிக்கிறது.

எனக்கு ஒரு புத்தகம் பிடிச்சுட்டா உடனே அண்ணன் ஆறுவுக்கு படிக்க கொடுப்பேன். வாசிச்சு முடிச்சதும் அவனும் நானும் அதைப்பத்தி ஆரம்பிச்சு எங்க வாழ்க்கைக்கு வந்து நிப்போம். விரைவில் அவன நேர்லபார்த்து கொடுக்கணும். நண்பர்கள் அவசியம் படிக்கவும். கண்டிப்பா பிடிக்கும். என் பரிந்துரை.


கருப்பு

சிதம்பர நினைவுகள்; வம்சி பதிப்பகம்; விலை - Rs.100;

Wednesday, January 22, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2014 – வாங்கிய புத்தகங்கள்


புத்தகம் - எழுத்தாளர் - பதிப்பகம் என்ற வரிசையில் படிக்கவும்

முழுத்தொகுப்பு:

ஆத்மாநாம் படைப்புகள் - ஆத்மாநாம் - காலச்சுவடு


நாவல்கள்:
 
1. வெள்ளை யானை - ஜெயமோகன் - எழுத்து
2. ராஜீவ்காந்தி சாலை - விநாயகமுருகன் - உயிர்மை
3. நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
4. நாயுருவி - வாமு கோமு - உயிர்மை
5. 6174 - க.சுதாகர் - வம்சி
6. எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன் - விஜயா பதிப்பகம்
7. புயலிலே ஒரு தோணி & கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம் - தமிழினி பதிப்பகம்
8. அசுரகணம் - க.நா.சுப்ரமண்யம் - நற்றிணை பதிப்பகம்
9. கூந்தப்பனை - சு.வேணுகோபால் - தமிழினி பதிப்பகம்
10. கடல்புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு பதிப்பகம்
11. காகித மனிதர்கள் - பிரபஞ்சன் - கவிதா
12. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் - தமிழினி பதிப்பகம்
13. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா - 'உ' பதிப்பகம் (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது)
14. குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகரன் - கிழக்கு
15. இடாகினிப் பேய்களும் - கோபிகிருஷ்ணன் - தமிழினி பதிப்பகம்
16. தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர் - பூம்புகார்
17. பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - பட்டுக்கோட்டை பிரபாகர் - (டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது)
18. சாயாவனம் - சா.கந்தசாமி - கவிதா
19. இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன் - விசா பப்ளிகேஷன்ஸ் 


மொழிபெயர்ப்பு நாவல்கள்: 

1. இனி நான் உறங்கட்டும் - பி. கெ. பாலகிருஷ்ணன்; தமிழாக்கம்: ஆ.மாதவன் - சாகித்திய அகாடமி
2. தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம் - தமிழில்: யூமா வாசுகி - சந்தியா பதிப்பகம்
3. தூப்புக்காரி - தமிழில்: மலர்வதி - அணல் வெளியீடு
4. தோட்டியின் மகன் - தகழி-சுந்தர ராமசாமி - காலச்சுவடு
5. பட்ட விரட்டி - தமிழில்: யூசுப் ராஜா - எதிர் வெளியீடு
6. மலையாள நாவல்கள்: குணவதி & வில்லி - தமிழில் சுரா - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் 
7. காதலின் துயரம் - கதே; தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி பதிப்பகம்
8. எங்க உப்பப்பாவிற்கு ஒரு யானை இருந்தது - பஷீர் - காலச்சுவடு
9. மௌனத்தின் குரல் - சசி தேஷ்பாண்டே: தமிழில்:வாஸந்தி - சாகித்திய அகாடமி
10. சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் கள்ளிக்காடு / தமிழில்: கே.வி.ஷைலஜா - வம்சி
11. தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்ல - தமிழில்: சரஸ்வதி ராம்னாத்
12. தன் வெளிப்பாடு - சுநீல் கங்கோபாத்தியாய்; தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி
13. மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்; தமிழில்: இளம்பாரதி

14. திருமணமாகாதவன் - சரத் சந்திர சட்டோபாத்தியாயா; தமிழாக்கம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15. வங்கச்சிறுகதைகள் - தொகுப்பு: அருண்குமார் முகோபாத்தியாய்; தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி
16. வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் - மு.ஞானம்
17. சிப்பியின் வயிற்றில் முத்து - போதிசத்வ மைத்ரேய; தமிழில்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18. பணீஷ்வர்நாத் ரேணு கதைகள் - தொகுப்பு: பாரத் யாயாவர்; தமிழில்: எச்.பாலசுப்ரமணியம்
19. மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் - தமிழாக்கம்: என்.எஸ்.ஜெகன்னாதன்
20. முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீரங்க
21. கங்கைத்தாய் - ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா
22. அக்னி நதி - குர் அதுல்ஜன் ஹைதர்

குறுநாவல்கள்:

1. திசையெல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால் - தமிழினி பதிப்பகம்
2. இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன் - கிழக்கு

சிறுகதைகள்:

1. கு.அழகிரிசாமி கதைகள் - கு.அழகிரிசாமி - சாகித்திய அகாடமி
2. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு - பூம்புகார்
3. கனவுப்புத்தகம் - ஜே.பி.சாணக்யா - காலச்சுவடு
4. மலையாள சிறுகதைகள் - தமிழில் சுரா - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (2 Nos)
5. நாகம்மாவா - நீல. பத்மநாபன் - கிழக்கு
6. திருஞ்ச்செங்கோடு - பெருமாள்முருகன் - நற்றிணை பதிப்பகம்
7. சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா - பாரதி புத்தகாலயம்
8. புனைவின் நிழல் - மனோஜ் - உயிர்மை
9. பறவை வேட்டை - அசோகமித்திரன் - கவிதா
10. முதல் தனிமை - ஜே.பி.சாணக்யா - காலச்சுவடு
11. பைத்திய ருசி - கணேச குமாரன் - தக்கை பதிப்பகம் (டிஸ்கவரி புக் பேலஸ்)
12. புஷ்கின் கதைகள் - தமிழில்: ரதுலன் - வ.உ.சி. நூலகம்  

கட்டுரை:

1. சிற்றிலக்கியங்கள் - நாஞ்சில் நாடன் - தமிழினி பதிப்பகம்
2. சாமானியனின் முகம் - சுகா - வம்சி பதிப்பகம் 
3. கரீபியன் கடலும் கயானாவும் - ஏ.கே. செட்டியார் - அகல்
4. தமிழின் நவீனத்துவம் - பிரமிள் - நற்றிணை பதிப்பகம்
5. சிறந்த பத்து நாவல்கள் - க. நா. சுப்ரமண்யம் - அன்னம்
6. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - சி.சு.செல்லப்பா - காலச்சுவடு
7. ஐங்குறுநூறு - செண்பகா பதிப்பகம்
8. ஆதலினால் - எஸ்.ராமகிருஷ்ணன் - விஜயா பதிப்பகம்
9. தீராக்காதலி - சாரு நிவேதிதா - உயிர்மை

கவிதை:

1. நகுலன் கவிதைத்தொகுப்பு - நகுலன் - காவ்யா
2. முதல் 74 கவிதைகள் - யுவன் சந்திரசேகர் - காலச்சுவடு
3. எங்கே அந்தப்பாடல்கள்? - ஆப்பிரிக்கப்பெண் கவிதைகள் - காலச்சுவடு
4. என் பெயர் ஜிப்சி - நக்கீரன் - கொம்பு வெளியீடு
5. நீ இப்பொழுது இறங்கும் ஆறு - சேரன் - காலச்சுவடு
6. தேர்ந்தெடுத்த கவிதைகள் - பிரம்மராஜன் - காலச்சுவடு
7. பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் - காலச்சுவடு
8. உப்புநீர் முதலை - நரன் - காலச்சுவடு
9. அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன் - காலச்சுவடு
10. மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி - புது எழுத்து
11. வேறொரு காலம் - யுவன் சந்திரசேகர் - மையம் 
12. ஒற்றை உலகம் - யுவன் சந்திரசேகர் - மையம்
13. ஏன் எனைக் கொல்கிறீர்கள்? - ராமசாமி - அகநாழிகை
14. மீண்டும் கடலுக்கு - சேரன் - காலச்சுவடு

மற்றவை:

1. டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் - 3 Nos. - சூரியன் பதிப்பகம்
2. தமிழ் நடைக் கையேடு - அடையாளம்
3. அடிப்படைத் தமிழ் இலக்கணம் - அடையாளம்

மறுபிரதி:

1. வெண்ணிற இரவுகள் - NCBH
2. காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும் - தமிழில்: யாழன் ஆதி - கருப்புப் பிரதிகள்
3. மழைப்பேச்சு - அறிவுமதி - விகடன்
4. புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி - சுதர்சன் புக்ஸ்
5. பார்த்திபன் கனவு - கல்கி - திருமகள்
வாங்கிய புத்தகங்களின் பட்டியலைவிட வாசித்த புத்தகங்களின் பட்டியல் தான் நாம் மதிப்பில் கொள்ளவேண்டியது. புத்தகக் கண்காட்சிக்கு முன்னதாக புத்தக வெளியீடு நிகழ்ச்சிகளில் வாங்கிய புத்தகங்களும் இதில் அடக்கம். கண்காட்சியில் வழங்கப்படும் 10% தள்ளுபடி சேர்க்காமல், மற்ற ஆஃபர்கள் மூலம் மட்டும் 740 ரூபாய் லாபம். :-)