Sunday, March 4, 2012

அரவான்

அரவான் - "நல்லா வருவான்" - திரை விமர்சனம் (மாதிரி)

Blog வச்சிருந்தா ஒரு படத்துக்காவது விமர்சனம் எழுதியாகனும்ங்கறது எழுதப்படாத விதி... அதனால நான் எழுதல, எழுதனும்ன்னு தோனுச்சு அதான் எழுதறேன்.படத்தின் முதல் ஸ்டில் வந்தநாள்முதல் "மருதநாயகம்" படத்தைப்போல் ஆகிவிடுமோ என்ற பயத்தையும் கடந்து வெளிவந்தேவிட்டது. ஏமாற்றமளிக்காமல் திருப்தியும் அளித்திவிட்டது கூடுதல் சிறப்பு.

முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சனம் சொல்லப்போறேன். (அப்படியாவது தியேட்டருக்குப்போய் படம் பாருங்களேன்)

அனைவரது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் மற்றொரு மைல்கல்லாக மாறியிருக்கிறான் அரவான். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் (வாங்கப்போகும் விருதுகளுக்கும் சேர்த்து)

மகாபாரதத்தில் பாரதப்போர் தொடங்கும் முன்பு பாண்டவர் வெற்றிக்காக பலி கொடுக்கப்பட்ட அர்ஜுனரின் மகன் பெயர்தான் "அரவான்". படத்திற்கும் அது பொருத்தமான தலைப்புதான்.

சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற "காவல்கோட்டம்" நூலின் சிறு பகுதியில் இருந்து மெருகேற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தனது முந்தைய படங்களின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு பீரியட் பில்ம் எடுக்க முன்வந்தமைக்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட்.

இந்தப்படம் 18 ஆம் நூற்றாண்டில் மதுரையை சுற்றி களவு செய்வதையே தொழிலாக செய்து, வாழ்ந்து வந்த கள்வர் கிராமத்து மக்களை சுற்றி பிண்ணப்பட்ட கதை.

ஆரம்ப காட்சியிலேயே வெள்ளியை (நட்சத்திரங்களை) வைத்து காலத்தை கணக்கிட்டு களவுக்கு செல்வதும், களவுக்கு போன இடத்தில் அவர்கள் செய்யும் களவு தந்திரங்களும் சபாஷ்... எண்ணெய் விட்டு சத்தமில்லாமல் தாள் திறப்பதும், குருட்டுக் கிழவியின் வெற்றிலை இடிக்கும் சத்தத்தில் நகைப்பெட்டியை ஆட்டயைப்போடுவதும் இயக்குனரின் "களவு" டச்.


படத்தின் ஆரம்பத்தில் பசுபதியின் கை ஓங்கினாலும், ஆதி தனது அசாத்திய நடிப்பால் அதன்பின் அனைவரையும் கவர்கிறார். இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுத்திறார்கள். சிக்ஸ் பேக் வைத்து, ஆதி இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

படத்தின் முதல்பாகம் முழுவதும் களவு தந்திரங்களும், ஆதி யார்? என்று அறியும் ஆர்வத்திலும் நகர்கிறது. இரண்டாம் பாகத்தில் ஆதியைப்பற்றிய முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கிறது. படத்தின் இறுதியில் களவு கிராமம் காவல் கிராமமாக மாறுகிறது.

பீரியட் பில்ம் என்பதால் கலை-இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு பின்னணியில் அதிகம் உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தின் ஒளிப்பதிவில் நாமும் 18 ஆம் நூற்றாண்டின் காடு... மலை... களவு என சுற்றித்திரிகிறோம்.

வசந்தபாலன் & சு.வெங்கடேசன் அவர்களின் எளிய வசனம் படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு சில : "தூங்குறவன் காவலுக்கு போகக்கூடாது, தும்முறவன் களவுக்கு போகக்கூடாது", "களவுல இருந்துதான் காவல் பொறக்கும்", "எல்லாரும் சாகத்தான் போறோம். சாகாத மனுசன்ன்னு யாராச்சும் இருந்தா அவனுக்கு கட்டிவைங்க"

பாடகர் கார்த்தி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். வாழ்த்துகள் சார் !!! பாடல்கள் கேக்க இதமாக இருக்கிறது. பின்னணி இசையைப்பொருத்தவரை தேறுகிறார். ஆனால் படத்தின் இறுதிக்காட்சியில் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜாவா இருந்திருந்தா கண்கலங்க வைத்திருப்பார் என்பதே அநேக பேரின் கருத்து.

சிமிட்டி கதாபத்திரத்தில் வரும் "அர்ச்சனா கவி", ஆரம்பத்தில் கலகலப்பாக தோன்றுவதிலும், அதன்பின் ஆதி திருமணம் செய்ய மறுக்கும்போது கண்கலங்குவதிலும் மனதை அள்ளுகிறார்.

ஹீரோயின் தன்சிகா இரண்டாம் பாகத்தில்தான் தோன்றுகிறார். கருப்பான தேகம், கண்ணால் பேச்சு என்று ஆரம்பித்து ஆதியை கல்யாணம் செய்யும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

விலைமகளாக வரும் ஸ்வேதா மேனன் ஒரு பாடலில் கவர்ச்சியும்... அதன்பின் வரும் ஒரு முக்கிய காட்சியிலும் அசத்துகிறார். "அரைஞான்கொடி" காட்சி ஒன்றுபோதும் இவரையும் இயக்குனரையும் பாராட்ட.

ராசாவின் மனைவியாக (சின்ன ராணி) வரும் ஹேமா மாலினி கண்களில் வஞ்சம் வைத்து பேசுவது அசல் வில்லத்தனம்.

அஞ்சலி இந்தப்படத்தில் சும்மா வந்துபோறார் (அஞ்சலிக்காக படத்துக்கு வந்து, ஏமாந்து நொந்துபோனான் அஞ்சலி ரசிகனான என் நண்பன்)

பரத்தும் படத்தில் நடித்திருக்கிறார் அவ்வளவே...

சிங்கம்புலியின் "கொழுந்தியா" காமெடியும், "கொளுந்தியாவ பத்திரமா பாதுகாக்கனும்" வசனமும் சிரிக்கவைக்கிறது.

யாருப்பா இந்த ராசா? என்று தியேட்டரில் கேக்க வைத்துவிட்டார் ராசாவாக நடித்தவர்.

படத்தின் நிறைகள்:

பீரியட் பிலிம்ன்னாலே "மனோகரா" காலத்து வசனம்தான்னு  இல்லாம எளிமையா நடைமுறை வசனம் படத்தில பேசறது பெரிய பலம்.

சித்தார்த்தின் ஒளிப்பதிவு நம்மையும் ஒரு கதாபாத்திரமா மாத்தி படத்துல சுத்திவர வச்சுருது.

18 ஆம் நூற்றாண்டின் கதாபாத்திரமாகவே மாறி... வாழ்ந்த நடிகர்கள் மிகப்பெரிய பலம்.

படத்தின் குறைகள்:

படத்தின் பெரிய குறை இரண்டாம் பாகத்தில் ஸ்பீட் பிரேக்கராக நிறைய பாடல்கள் வருவதுதான். அவசியம் இத்தன பாட்டு வேணுமா?

படத்தில் ஆங்காங்கே தென்படும் மசாலாத்தனம் அடுத்த குறை.

ஹீரோ மாடு மேல வர்றப்ப போடற சண்ட காட்சியிலயும் மத்த காட்சியிலையும் கிராபிக்ஸ் அப்பட்டமா தெரியுது. ஏன் பாஸ் சரியா கவனிக்கலையா?

படம் முடிஞ்சதுக்கு அப்புறம் மரண தண்டனை தடை செய்யப்படவேண்டும் என்ற ஸ்லைட் எதுக்காக பாஸ்? படத்தோட கடைசி அஞ்சு நிமிசத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

பினிஷிங் டச்:

கனமான கதை... கடின உழைப்பு... தமிழ் சினிமாவில் மற்றுமொரு மைல்கல் - அரவான் (சொல்லமறந்துட்டேன்... மசாலா பட விரும்பிகள், இந்த படத்துக்கு போகாதீங்க)

17 comments:

 1. நச் பாயிண்டுகள்.. நான் விமர்சனம் எழுதாம இருந்திருக்கனுமோ.? அவ்வ்வ்...

  ReplyDelete
  Replies
  1. அவ்வ். உங்க விமர்சனத்துக்கு முன்னாடி இதெல்லாம் சும்மா... நன்றி மாம்ஸ் :-))

   Delete
  2. நான் சொல்வதெல்லாம் உண்மை ... உண்மையைத்தவிர வேறேதும் இல்லை...

   Delete
 2. Elam k nanba. Film pathi vimarsanam pana sona ethuku unga friends emathu poitan podurenga.

  ReplyDelete
 3. Very neatly pointed out the keypoints :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாப்பி. படம் பார்த்தாச்சா?

   Delete
 4. haa haa machi antha anonymous namma ko.pa.se va iruppaaro ??

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா. இருக்கலாம் மச்சி. :-))

   Delete
 5. machi vimarsanam padiththadum patam paarka aasai vandhuduchchu..

  ReplyDelete
  Replies
  1. உடனே பாரு மச்சி. கண்டிப்பா உனக்கு புடிக்கும். :-))

   Delete
 6. இப்படிலாம் விமர்சனம் எழுதி ஆர்வத்தை தூண்டக்கூடாது-கதைய பத்தி மூச்சே விடல :-)) வாழ்த்துகள்

  ReplyDelete
 7. புத்தகப்புழுMarch 5, 2012 at 7:20 PM

  கதை சொல்லாமல் விமர்சனம் எழுதியதற்கே ஒரு சல்யூட்.இரண்டாவது முறை பார்த்தால் இன்னும் சில நிறைகளை சேர்ப்பீர்கள் என்று தோன்றுகிறது.மற்றபடி கச்சிதமான விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மாப்பி. விரைவில் மறுமுறை பார்ப்பேன்னு நினைக்கிறேன். :-))

   Delete
 8. புத்தகப்புழு சொன்னமாதிரியே,கதை சொல்லாம விமர்சனம் - சிறப்பு..ஆனா ஏன் வழக்கமான விமர்சன நடையை உபயோகிக்கனும்? சல்யூட் ,சபாஷ் இந்த மாதிரி..உங்க ட்வீட்ஸ் போலவே இயல்பான நடையில கூட எழுதலாம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல. மைண்ட்ல வச்சுக்கறேன். இனிமே மாத்திக்கறேன். :-))

   Delete

தங்கள் கருத்தை பதியவும்...