Friday, October 11, 2013

தலைப்பில்லாக் கவிதை

கம்பியின் ஜீவனற்ற கன்னி
அறுந்ததில்
முறிந்தது தற்கொலை முயற்சி.

உலகின் பார்வையில் தப்பித்து
ஒளிந்துகொள்ளும்
இருள் நேரமானதால்
இத்தோல்வி
விமர்சனமேதுமற்றுப் போனது

கிழியும் காகிதமெனத்
தலைப்பிட்ட
மரண அஞ்சலிக்கவிதையை
மிகப்பத்திரமாக புத்தகத்தோடு
பதுக்கி வைக்கிறேன்.

அடுத்த தற்கொலை முயற்சியின்
வெற்றியில் அப்புறப்படுத்துங்கள்
வாழ்வில் தோற்றவனின்
நாக்குதள்ளிய பிரேதத்தை
அவனின் கடைசி வார்த்தைகளுடன்